தேசியவாதிகளைத் திருப்திப்படுத்தும் சிறிலங்கா அதிபர் – அனைத்துலக ஊடகம்
சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் வாக்குறுதியை வழங்கியிருந்தாலும் கூட, அந்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. கெட்டவாய்ப்பாக இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
