மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

காணாமல் போனோரின் நினைவு தினம் – அழைப்புக்கு பதிலளிக்காத சிறிலங்கா அதிபர்

சீதுவ, ரத்தொலுவவில் உள்ள காணாமல் போனோருக்கான நினைவுச்சின்னத்தில், நாளை நடைபெறவுள்ள காணாமல் போனோருக்கான 35வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு சிறிலங்கா அதிபர் அனுர குமார திசாநாயக்க தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக துறை தலைவருடன் பிமல் ரத்நாயக்க சந்திப்பு

சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் துறைத் தலைவர் நீ லியு ஹெய்சிங்கைச்  (Nie Liu Heixing)  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

10ஆவது திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு

பத்தாவது  ‘திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு 2025’  கடந்த  22 ஆம் திகதி ஆரம்பமாகி  இடம்பெற்றுவருகிறது.

சர்வதேசப் பொறிமுறையை எதிர்ப்பதாக ஐ.நாவிடம் முறைப்படி அறிவிப்பு

மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்த, சிறிலங்கா தொடர்பான சர்வதேச பொறிமுறையை எதிர்ப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம், அரசாங்கம் முறைப்படி அறிவித்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து அமைச்சர் இந்தியாவுக்கு அழைப்பு

சிறிலங்காவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

86 ஏக்கர் தனியார் காணிகளே விடுவிப்பு – ஒப்புக் கொண்டது அரசாங்கம்

இந்த ஆண்டில் சிறிலங்கா படையினரின் வசம் இருந்த 86 ஏக்கர் தனியார் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன என்பதை சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஹரிணிக்கு இந்தியா ஏன் செங்கம்பள வரவேற்பு அளித்தது?

ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிபர் முறையை அறிமுகப்படுத்திய பின்னர்,  அரசாங்கத்திற்குள் தனித்துவமான அதிகார மையங்கள் இருந்த காலங்களில் மட்டுமே, சிறிலங்கா பிரதமர்களுக்கு  இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்புகளை வழங்கியது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான நிதிக்கு இந்தியா நிபந்தனை

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிய 62 மில்லியன் டொலர் கடனை கொடையாக மாற்றுவதற்கு இந்தியா நிபந்தனைகளை விதித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் குறித்த விவாதம் நவம்பர் 4இல் நடக்காது

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, விரைவில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

கேணல் கெலும் மத்துமகேவை கைது செய்வதற்கான தடை நீடிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதற்கான இடைக்கால தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.