மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஐ.நாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவி

சிறிலங்கா கடற்படைக்கு  ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகத்திடம் இருந்து, ‘கொங்னைட் S12’ (Congnyte S12) என்ற செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவியை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சஜித்

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சைபர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா பிரகடனத்தில் சிறிலங்கா கைச்சாத்து

வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க சைபர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா மாநாட்டில் (UNCC)  சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய நாசகாரி போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் அகிபோனோ (JMSDF AKEBONO) என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமனம்

சிறிலங்காவின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய புலனாய்வு தலைவர் பதவியிலிருந்து விலகினார் ருவான் வணிகசூரிய

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து  மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்று அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

உலகளவில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாணம் 

உலகளவில், 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்  இரண்டாவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

10 மாதங்களில் 6.1 மில்லியன் பேர் குறித்து சிறிலங்கா காவல்துறை விசாரணை

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை- சுமார் 6.1மில்லியன் நபர்கள் (6,127,138)  பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்  திறன்பேசி பயன்படுத்த விரைவில் தடை

சிறிலங்காவில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைச் சிறுவர்கள்  திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சீன- சிறிலங்கா கல்வி, ஆராய்ச்சி மையத்தின் கருத்தரங்கு

சீன-சிறிலங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டு மையம் அமைக்கப்பட்டதன் 10வது ஆண்டு நிறைவு, வியாழக்கிழமை கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது.