மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையை இழக்கிறது அமெரிக்கா – பாகிஸ்தானும் தோல்வி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி வந்த அமெரிக்கா, வரும் டிசெம்பர் மாதத்துடன் உறுப்பு நாடு என்ற தகைமையை  இழக்கவுள்ளது.

இழுபறியில் 2ஆவது சீன – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் – அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

இரண்டாவது சீன – சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல், அடுத்த ஆண்டின் முன் அரையாண்டு பகுதியிலேயே இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டம் – சீனாவுடன் போட்டியில் குதிக்கிறது இந்தியா?

கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தில், இந்தியாவின் அரசுத்துறை மற்றும் தனியார் துறைறைச் சேர்ந்த துறைமுக நிறுவனங்களை ஈடுபடுவதை ஊக்குவிப்பதில் இந்திய அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக புதுடெல்லி அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொழும்பில் பாகிஸ்தான் அமைத்துள்ள உருது மொழிப் பயிற்சி நிலையம் – ஹிந்திக்கு போட்டி?

சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், உருது மொழிப் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில், இது இலங்கையில் ஹிந்தி மொழியை பரப்பும் இந்தியாவின் திட்டத்துக்குப் போட்டியான நடவடிக்கையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

காணிகளை மீள ஒப்படைப்பது குறித்து வடக்கு ஆளுனருடன் கத்தரின் ருசெல் அம்மையார் பேச்சு

சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சிறிலங்கா படையினர் வசமுள்ள நிலங்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது குறித்து, அமெரிக்காவின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல் சிறிலங்கா அரச தரப்பினருடன் பேச்சு நடத்தியுள்ளார்.

திறந்த அரசுகளின் கூட்டமைப்பில் இணைந்தது சிறிலங்கா

திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில் (Open Government Partnership) சிறிலங்காவும் புதிய உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளது.  மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஆரம்பமான திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில், சிறிலங்கா இணைந்து கொள்வதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்புகளில் பங்கேற்கிறார் அமெரிக்க அதிகாரி கத்தரின் ருசெல்

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவராகப் பணியாற்றும் கத்தரின் ருசெல் அம்மையார் இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்த அரசு அனுமதிக்க மறுத்த அமெரிக்க அதிகாரி இன்று சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல், சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்

வானத்தில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் நாள் சிறிலங்கா அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.