மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இந்தியாவின் நிதியுதவியுடனேயே பலாலி விமான நிலைய அபிவிருத்தி

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவே உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் அத்துல ஜெயவிக்கிரம தெரிவித்தார்.

நல்லிணக்கக் கிராமம் என்ற பெயரில் வடக்கில் சிங்களக் குடியேற்றம் – கூட்டமைப்பு எதிர்ப்பு

நல்லிணக்கக் கிராமம் என்ற பெயரில், வடக்கில் சிறிலங்காப் படையினரைக் குடியமர்த்தி, சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சீன விமானப்படை உயர் அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம்

சீன விமானப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

900 கடற்படையினருடன் நாளை கொழும்பு வருகிறது அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியைச் சேர்ந்த யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வவுனியாவில் இராணுவக் கிராமம் – வித்தியா குடும்பத்துக்கும் ஒரு வீடு

சத்விருகம (நல்லிணக்கக் கிராமம்) என்ற பெயரில் சிறிலங்கா படையினரால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் கிராமத்தில், புங்குடுதீவில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா குடும்பத்தினருக்கும் வீடு ஒன்று வழங்கப்படவுள்ளது.

நுரைச்சோலை மின் நிலையத்தை செயற்படுத்த சீனாவின் உதவியைக் கோருகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் பிரதான மின் உற்பத்தி மையத்தைச் செயற்படுத்துவதற்கு, சீனாவின் உதவியையும் ஆதரவையும் சிறிலங்கா அரசாங்கம் கோரவுள்ளதாக, பிரதி மின்சக்தி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் 1 பில்லியன் டொலரை கடனாக வாங்குகிறது சிறிலங்கா

ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான நாணய கைமாற்று உடன்பாடு ஒன்றை சீனாவுடன் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஓடுபாதையை விரிவாக்காமல் தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையம் – ஒரு ஆண்டில் செயற்படும்

ஓடுபாதையை விரிவாக்கம் செய்யாமல் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தயமுயர்த்துவதற்கு இந்திய- சிறிலங்கா அதிகாரிகள் இணக்கம் கண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பி்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நம்பகமான விசாரணையே எமக்குத் தேவை – ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்

சிறிலங்காவில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளையே ஐ.நா வலியுறுத்துவதாக ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைகிறது – கோத்தா குற்றச்சாட்டு

நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் தாம் நிறுத்திய இராணுவப் படைப்பிரிவுகளை, அங்கிருந்து விலக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.