மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பிரகீத் கடத்தல் முக்கிய சந்தேகநபரான லெப்.கேணல் கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேகநபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் சம்மி குமாரரத்ன நோய்வாய்ப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீன முதலீட்டாளருடன் இணக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா தீவிர முயற்சி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஏப்ரல் 6ஆம் நாள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீன முதலீட்டாளருக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு திருத்தத்தில் அமெரிக்கா தலையீடு – கூட்டு எதிர்க்கட்சி விசனம்

அரசியலமைப்புத் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்கா கருத்தரங்கை நடத்துவது குறித்து, கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுபினர் தினேஸ் குணவர்த்தன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இறுதிப் போரில் 50 கவச ஊர்திகளை இழந்தோம் – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் கடைசித் தாக்குதல் நடந்த போது தான், பீஜிங்கில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

இராணுவத்தளம் அமைக்க சீனாவுக்கு இடமளியோம் – சிறிலங்கா அரசாங்கம்

எந்தவொரு சூழ்நிலையிலும், சீனாவின் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு சிறிலங்காவில் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எட்கா உடன்பாட்டு வரைவை இன்னமும் ஆராய்கிறது இந்தியா

சிறிலங்காவுடன் செய்து கொள்ளவுள்ள எட்கா எனப்படும் விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டின் வரைவை இந்தியா இன்னமும் ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் இதற்குப் பதில் அளிக்கப்படும் என்றும் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

போருடன் தொடர்புடைய நீதிவிசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர்

போருடன் தொடர்பான விசாரணைகளை அடுத்து நடத்தப்படும் உள்நாட்டு நீதிச் செயல்முறைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தான் இணங்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காப்பாற்ற முயன்ற மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவின் காலை வாரினார் கோத்தா

அதிபர் தேர்தல் பரப்புரைகளில், ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இதற்கு அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவர்- சம்பந்தன் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில், இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சிறிலங்காவில் அமெரிக்க விமானப்படை உயர்அதிகாரி

அமெரிக்க விமானப்படையின் பசுபிக் விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.