மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டுகிறது சிறிலங்கா கடற்படை

பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவில், புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா கடற்படை ஆரம்பித்துள்ளது.

பனாமா ஆவணங்கள் – குற்றச்சாட்டை மறுக்கிறார் மேஜர் நிசங்க சேனாதிபதி

வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தாம், வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கவில்லை என்று மறுத்துள்ளார் அவன்ட் கார்டே பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி.

தாஜுதீன் கொலை – மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் மூன்று மணிநேரம் விசாரணை

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம், மூன்று மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

லலித் அத்துலத்முதலியின் படுகொலை குறித்து மீள் விசாரணை செய்யக் கோருகிறார் சகோதரர்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் படுகொலை தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அவரது சகோதரர் தயந்த அத்துலத்முதலி கோரிக்கை விடுத்துள்ளார்.

“என்னையும் மகிந்தவையும் திருக்கை வாலினால் அடிக்க வேண்டும்” – என்கிறார் கோத்தா

சரத் பொன்சேகாவை சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக, தன்னையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், திருக்கை வாலினால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

பனாமா ஆவணங்களில் சிக்கினார் கோத்தாவின் கூட்டாளி மேஜர் நிசங்க சேனாதிபதி

வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றிய மற்றொரு தொகுதி பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், சிறிலங்காவில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான நிசங்க சேனாதிபதியின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் புலிகளை வைத்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை ஆடும் மோசமான விளையாட்டு

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கைது மற்றும் கடந்தகாலத்தில் இடம்பெற்ற இரகசிய இராணுவ செயற்பாடுகள், குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகள் காரணமாக, சிறிலங்கா இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சத்ஹண்ட சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

எசல வீரக்கோனுக்கு வெளிவிவகாரச் செயலர் பதவி – பின்னணிக் காரணம் வெளியானது

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், இடைக்கால நீதிச் செயல்முறை மற்றும் ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக  கூட்டாளிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான தேவைகளைக் கருதியே, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் ஆயுதப்படைகள், காவல்துறையை மறுசீரமைக்க வேண்டும்- ஐ.நா நிபுணர்

சிறிலங்காவின் முக்கிய துறைகளான ஆயுதப்படைகள், காவல்துறை,  சட்டமா அதிபர் திணைக்களம், மற்றும் நீதித்துறை என்பன மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்று, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் மைத்திரி- மோடி சனிக்கிழமை சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில். எதிர்வரும் 14ஆம் நாள், சனிக்கிழமை சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.