மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அமெரிக்க நாசகாரி கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள யுஎஸ்எஸ். ஹொப்பர் என்ற அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி கப்பலில், சிறிலங்கா கடற்படையினருக்கு நேற்று பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இராணுவப் புலனாய்வு பிரிவின் சிறப்பு நடவடிக்கைகள் விபரங்களை வெளியிட்டார் சரத் பொன்சேகா

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

45 ஆவது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். வொசிங்டனில் நேற்று நடந்த இந்த விழாவில், அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ஜி.ரொபேர்ட்ஸ், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – அல் ஹுசேன்

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை சிறிலங்கா குணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் கால் வைக்கிறது சீ்னாவின் அலிபாபா

உலகின் மிகப் பிரபலமான சீன இணைய வணிக நிறுவனமான அலிபாபா, சிறிலங்காவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி

அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

சிறிலங்காவுடன் மீண்டும் இணைகிறார் எரிக் சொல்ஹெய்ம் – ரணில் சந்திப்பு

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தும் பேச்சுக்களில் நடுநிலையாளராக கலந்து கொண்ட நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முடன், மீண்டும் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஓமந்தையில் இருந்து சிறிலங்கா படையினர் முற்றாக வெளியேறவில்லை

வவுனியா – ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.

கப்பம் கோரி தமிழ் இளைஞனை கடத்தி காணாமல்போகச் செய்த கடற்படை அதிகாரி கைது

கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞன் ஒருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளுக்கு இராணுவ பாதுகாப்பு

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. சிங்கள நாளிதழான திவயின இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.