மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழக்கும் தீர்மானம் – பிரித்தானியா முன்வைக்கும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரவுள்ளது.

சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம் – கிளைமோர் தாக்குதல் நடத்த இரண்டு முறை முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உயர்மட்ட அதிகாரியை கொழும்புக்கு அனுப்பினார் ட்ரம்ப்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஏஞ்சலா அக்கேலர், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரிடம் நியமனப் பத்திரங்களை கையளித்தார் புதிய இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தனது நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்து,  பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் – அமெரிக்கத் தூதுவர்

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தை பொறுப்பேற்க இந்தியா புதிய நிபந்தனைகள்

திருகோணமலை துறைமுகத்தின் முகாமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு இந்தியா புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதாக உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான கூட்டு வலுப்பெற்றுள்ளது – அமெரிக்க தூதுவர்

அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பரின் கொழும்பு பயணத்தின் மூலம், சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான கூட்டு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

லசந்த படுகொலை – சரத் பொன்சேகாவிடம் நாளை மீண்டும் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், மீண்டும் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக இல்லாதொழிக்குமாறும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார்.

மகிந்தவின் தலைமையினால் கூட்டு எதிரணிக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது – அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, தமது தலைவராக அங்கீகரிப்பதன் மூலம் கூட்டு எதிரணியினால் எந்த ஆதாயமும் பெற முடியாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.