மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் மீட்பு – கிளம்பும் சந்தேகங்கள்

சாவகச்சேரி – மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி, மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்களை விலக்கவில்லை- யாழ். படைகளின் தளபதி

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து, சிறிலங்கா இராணுவத்தினரின் எந்த முகாம்களும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்று யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரின் மனோநிலை மாறவில்லை – ஒப்புக்கொள்கிறார் யாழ். தளபதி

இறுதிப்போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரின் மனோநிலையில் இன்னமும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? – விக்னேஸ்வரன் விளக்கம்

ஹிக்கடுவையில் நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டை, அரசியல் காரணங்களுக்காக தாம் புறக்கணிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பலாலியில் முதற்கட்ட ஆய்வில் ஈடுபட்டது இந்திய அதிகாரிகள் குழு

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவது தொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று நேரில் ஆராய்ந்துள்ளது.

உலோக வீடுகளை அமைக்கும் திட்டம் – மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த வீடற்றவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், உலோகங்களால் ஆன தயார்நிலைப் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலிகாமத்தில் 700 ஏக்கர் காணிகள் இன்று இராணுவப் பிடியில் இருந்து விடுவிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 700 ஏக்கர் காணிகள் இன்று சிறிலங்கா படையினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இன்று யாழ்ப்பாணம் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  இந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளார்.

குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா மாரடைப்பால் மரணம்

யாழ்.குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என்.நவரட்ணராஜா (வயது62) இன்று அதிகாலை யாழ்.போதனா மருத்துவமனையில் மாரடைப்பினால் மரணமானார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்கிறார் பரணகம

பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தனது 75 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.