மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து ஆய்வு நடத்த இந்திய அரசு முடிவு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழர்களை வெளியேற்றி விட்டு திருப்பதியில் தரிசனம் செய்த மகிந்த

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடத்த திருப்பதி செல்ல முயன்ற தமிழ் அமைப்புகளை ஆந்திர காவல்துறையினர் தமிழ்நாடு எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

திருப்பதி சென்றடைந்தார் மகிந்த – கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பயணத்திட்டம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை திருப்பதியைச் சென்றடைந்துள்ளார்.அங்கு அவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று திருப்பதி செல்கிறார் மகிந்த – பாதுகாப்பு கெடுபிடிகளால் தமிழர்கள் திணறல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று மாலை திருப்பதிக்குச் செல்லவுள்ள நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கேபியை விசாரிக்க அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடுகிறது சிபிஐ

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், இந்திய மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.

இந்தியப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா வருவதில் இழுபறி

தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு,  திட்டமிட்டது குறித்து சிறிலங்காவில் விசாரணை நடத்த இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு அனுமதி கோரியுள்ளது.

தமிழர்களுக்கு சிறிலங்கா சமஉரிமையை வழங்க வேண்டும் – வெங்கய்ய நாயுடு

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு சம உரிமையையும், சமமான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று இந்தியாவின் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதலுக்கு சூட்டப்பட்ட பெயர்- ‘திருமண மண்டபம்’

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது நடத்தப்படவிருந்த தற்கொலைத் தாக்குதலுக்கு திருமண மண்டபம் (wedding hall)  என்று பாகிஸ்தானிய உளவுப்பிரிவினால் பெயரிடப்பட்டிருந்ததாக, இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

சென்னையில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான சாகிர் ஹுசேனுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு நன்றி கூறிய மோடி – மீனவர் விடுவிப்பின் பின்னணியில் சல்மான் கான்?

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்ததற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ள நிலையில், இந்த விடுதலையின் பின்புலத்தில் நடிகர் சல்மான் கானும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.