மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நரேந்திர மோடி தீவிர அக்கறை – முரளிதர் ராவ்

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை கொண்டுள்ளதாக, பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

மண்டபம் முகாமில் கருத்துக்கேட்பு – 70 வீதமான அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம்

தமிழ்நாட்டில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாக, அவர்களிடம் கருத்து அறியும் சந்திப்பை நடத்திய இந்திய நாடாளுமன்ற நிலையியல்குழு தெரிவித்துள்ளது.

அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை – தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை இந்திய மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்ற 5 தமிழர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அகதிகளாக தமிழ்நாட்டைச் வந்தடைந்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்குஉள்ளூர் நீதிமன்றத்தினால் தலா இரண்டு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான் வீட்டுக்கு முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடக்கில் தனக்கு 35 வீத வாக்குகள் கிடைக்குமாம் – மகிந்தவின் நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில் இந்தமுறை தனக்கு 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

சீன நீர்மூழ்கிகளின் வருகை குறித்து இந்தியாவுக்குத் தெரியுமாம் – மகிந்த கூறுகிறார்

சீனக் கடற்படையின் நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்து நிற்பது குறித்து இந்தியாவுக்குத் தெரியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

வட மாகாணசபைக்கு எல்லா சுதந்திரமும் உள்ளதாம் – தந்தி தொலைக்காட்சியில் மகிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வடக்கு மாகாணசபைக்கு, தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம் இருப்பதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு இரு போர்க்கப்பல்களை விற்கிறது இந்தியா

சிறிலங்காவுக்கு இரண்டு போர்க்கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளதாக, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.