மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இராணுவ தேவைக்காக சிறிலங்கா துறைமுகங்களை கோரும் நாடுகள்

சிறிலங்காவின் துறைமுகங்களை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த சில நாடுகள் அனுமதி கோரியுள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சரும் கொழும்பு வருகிறார்

ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மத்தலவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை நிராகரித்த வளைகுடா விமான நிறுவனங்கள்

சிறிலங்காவின் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, முன்னணி வளைகுடா விமான நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை என சிவில் விமானப் போக்குவரத்து பிரதி  அமைச்சர்  ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக குற்றப்பத்திரம் கையளிப்பு

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீதான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் இன்று  குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகளை மீறிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா அபராதம்

சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு உடன்பாட்டின் மூலம், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி,  அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக,  சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அவசரமாக 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்பி வைத்தது இந்தியா

எரிபொருள் விநியோக நெருடிக்கடியை தீர்க்கும் நோக்கில்,  38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்  அடங்கிய ஒரு கப்பல், இந்தியாவில் இருந்து நாளை கொழும்புக்கு வந்து சேரவுள்ளது.

சுரேஷ் சாலேயை நீதிமன்றில் முன்நிறுத்த உத்தரவு

குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக்காவலில் உள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை, ஏப்ரல் 22 ஆம் நாள்,  நீதிமன்றத்தில் முன்னிறுத்த, கொழும்பு கோட்டை நீதிவான்  உத்தரவிட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இன்று கொழும்பு வருகிறார்

ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின் தலைமையிலான உயர்மட்ட ரஷ்யத் தூதுக்குழு இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிறிலங்காவுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர் நிதியுதவி

சிறிலங்காவிற்கான நிதி ஒதுக்கீட்டை 100 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா தெரிவித்துள்ளார்.