சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை முடிவு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த நாளை முடிவை அறிவிப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த நாளை முடிவை அறிவிப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
கொக்குவிலில் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்களுக்குத் தலைமை தாங்கியவர் என்று கூறப்படும் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேரை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ, மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனது ஆசி இல்லாமல் எவராலும் புதிய அரசாங்கத்தை அமைத்து விட முடியாது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்படவுள்ளன.
சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, கட்சிகளின் செயலாளர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் திணைக்களத்தில் வரும் ஓகஸ்ட் 4ஆம் நாள் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்த சிராந்தி ராஜபக்சவும், யோசித ராஜபக்சவும், முன்னிலையாகவில்லை.