ஜனவரியில் தனித்து ஆட்சியமைக்கத் தயாராகிறது ஐதேக – உடைகிறது கூட்டு அரசு?
அடுத்த ஆண்டில், கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தனித்து ஆட்சி அமைப்பது குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டில், கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தனித்து ஆட்சி அமைப்பது குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டமைக்கு, சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எழுதிய கடிதமே காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக பிரசாத் காரியவசம், நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார். அதேநாளில்,தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலராக உள்ள எசல வீரக்கோன், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு வரையில் மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு வழி செய்யும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்சவை நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நேற்று விலகியதை அடுத்து, பதில் வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் நிலவுகின்றன.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரவி கருணாநாயக்க எடுத்துள்ள முடிவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மூன்று பத்தாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதன் மூலம் அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். ஆனால், என்னால் அதனை அனுபவிக்க முடியவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடி விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பாக, சிறிலங்கா அதிபரும், பிரதமரும் முடிவெடுப்பார்கள் என்று ஐதேக பொதுச்செயலரும் அமைச்சருமான கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.