மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

எரிக் சொல்ஹெய்மின் செவ்வி – பீரிஸ் வாய்திறக்க மறுப்பு

சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் தொடர்பாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அளித்துள்ள செவ்வி தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

மன்னார் கடல் படுக்கை எண்ணெய் அகழ்வு – இந்தியா, சிங்கப்பூர் போட்டி

மன்னார் கடல்படுக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

மாற்று அரசியல் தலைமையை உருவாக்க பௌத்த பிக்குகளுக்கு விஜேதாச அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டு அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, அரசியல் மாற்றத்துக்காக பரப்புரைக்கு பௌத்த பிக்குகள் தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முதல் கட்டளை அதிகாரி மாடிப்படியில் தவறி வீழ்ந்து மரணம்

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவான சிறப்பு அதிரடிப்படையின் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்த போதி லியனகே மாடிப்படியில் இருந்து தவறி வீழ்ந்து மரணமானார்.

விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் ஒருமனதாக கொண்டு வரப்பட்டுள்ளது.

விஜேதாச ராஜபக்சவை வெளியேற்றுவதற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு

சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு, சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடாதிபதி, வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சிக்கால மோசடிகளை விசாரிக்க ட்ரயல் அட் பார் நீதிமன்றங்கள்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்க, புதிய மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு அக்கறை – இந்தியத் தூதுவர்

சிறிலங்காவின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

‘எனக்கு ஒன்றும் தெரியாது’ – இரண்டரை மணிநேர விசாரணையில் சிராந்தியின் பதில்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணி, சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்றே பதிலளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்சநீதிமன்றில் 10 மனுக்கள்

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் 10 மனுக்களைத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.