மேலும்

செய்தியாளர்: மட்டக்களப்புச் செய்தியாளர்

மட்டக்களப்பில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் எட்டாவது வேட்பாளர் யார்?

அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எட்டாவது வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று தெரியவருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கும் 13 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்

வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 13 வரையான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு, மண்டூரில் இன்று காலை இனந்தெரியாத நபர்களால், அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக பணியாற்றும், 44 வயதான சச்சிதானந்தம் மதிதயான் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தினால் முற்றாக முடங்கியது மட்டக்களப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்று முற்றிலும் செயலிழந்தன.

தமிழிலேயே பாடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுரை கூறிய சிறிலங்கா அமைச்சர்

வடக்கு, கிழக்கில் சிறிலங்காவின் தேசிய கீதத்தை தமிழிலேயே பாடுங்கள் என்று சிறிலங்காவின் சிங்கள அமைச்சர் ஒருவரே தமிழர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அம்பாறையில் காணாமற்போனோர் குறித்த விசாரணை – புறக்கணிக்க சிவில் அமைப்புகள் அழைப்பு

காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று அம்பாறையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த விசாரணைகளைப் புறக்கணிக்குமாறு, மாவட்ட சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கிழக்கு கரையோர தொடருந்துப் பாதை திட்டம் – இந்தியா தீவிர பரிசீலனை

கிழக்கில் கரையோர தொடருந்துப் பாதையை அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இந்தியா அக்கறையுடன் பரிசீலிக்கும் என்று, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உதவியுடன் கிழக்கில் அமைக்கப்பட்ட முதல் தொகுதி வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட முதல்தொகுதி வீடுகள், இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், புதினப்பலகை ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு, நகர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.