மேலும்

வரவுசெலவுத் திட்ட முதலாம் வாசிப்பின் மீது இன்று மாலை வாக்கெடுப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின், 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, இன்று  மாலை 6.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்குக் கூடவுள்ள நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாவது நாள் விவாதம் இடம்பெறும்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க  நவம்பர் 12 ஆம் நாள்,  2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 13 ஆம் நாள்  விவாதம் தொடங்கியது.

இன்று மாலை 6 மணி வரை இடம்பெறும் விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதையடுத்து, வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான  ‘குழு நிலை’  விவாதம், நாளை  தொடங்கி டிசம்பர் 14-ஆம் நாள் வரை நடைபெறும்.

மூன்றாவது வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14-ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *