மேலும்

செம்மணியில் மேலும் இரு இடங்களில் எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு இடங்களிலும் மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 48வது நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது செம்மணிப் புதைகுழிக்கு அருகே எழுமாற்றாக இரண்டு இடங்களில் குழிகள் தோண்டப்பட்ட போது, ஒன்றில் தலையற்ற எலும்புக்கூடு உள்ளிட்ட 3 எலும்புக்கூடுகளும் மற்றொன்றில் ஒரு எலும்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை நேற்றைய அகழ்வின் போது மொத்தமாக 9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டதுடன், 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இதையடுத்து, இதுவரை 102 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, 524 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 513 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *