செம்மணியில் நேற்றும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 23ஆம் நாள் அகழ்வுப் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 353 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நேற்றையதினம், 7 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 334ஆக அதிகரித்துள்ளது.
படம்- பிரபாகரன் டிலக்சன் (முகநூல்)

