மேலும்

இன்று பிற்பகல் இந்தியா செல்கிறார் அனுர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று பிற்பகல் புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்லும் அவர், செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, மனிதகுலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துதில் கவனம் செலுத்துகிறது.

பெப்ரவரி 19 ஆம் நாள், சிறிலங்கா அதிபர் அனுரகுமார  திசாநாயக்க இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

ஐந்து நாள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்கள், 45க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடுகின்றனர்.

இந்தியாவிற்கான பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி மற்றும் பல உலகத் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *