மேலும்

தையிட்டி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிப்பு.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு  எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐந்து பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக  நேற்றுக்காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றிருந்த சிறிலங்கா காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள், மற்றும் பிரதேச சபைகளின் 4 உறுப்பினர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நேற்று  மல்லாகம் பதில் நீதிவான் காயத்திரி அகிலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது, அவர்களை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.

குறித்த வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *