மேலும்

வீரமணி, வேல்முருகன் ஆகியோருடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு வேல்முருகனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு அவரது பணியகத்தில் நேற்று பி.ப 2.25 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 3 மணிநேரம் நேரம் இடம்பெற்றது.

இதன்போது தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு  உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும்,  ஏக்கிய ராஜ்ய  அரசியலமைப்பை நிராகரிப்பதற்கான அவசியம் குறித்தும்,  ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படுவதன் அவசியம் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில்,  தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  பொன்னுத்துரை ஐங்கரநேசன், செல்வராசா கஜேந்திரன், தர்மலிங்கம் சுரேஸ், கனகரட்ணம் சுகாஷ், நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று மதியம் 12 மணியளவில் தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர்.

திராவிடர் திடலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போதும் தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பு  உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும்,  ஏக்கிய ராஜ்ய  அரசியலமைப்பை நிராகரிப்பதற்கான அவசியம் குறித்தும்,  ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *