மேலும்

உலகளவில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாணம் 

உலகளவில், 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்  இரண்டாவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்லி பிளானட் (Lonely Planet )  ‘சிறந்த பயணங்கள் 2026’ வெளியீட்டின் கீழ்,  இந்தப் பட்டியலை அறிவித்துள்ளது.

இதில் முதலிடத்தை அமெரிக்காவின் மைன், இரண்டாமிடத்தில் யாழ்ப்பாணம், மூன்றாமிடத்தில் ரியூனியன் என்பன இடம்பெற்றுள்ளன.

இதில் யாழ்ப்பாணம் பற்றிய குறிப்பில்,

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, குடும்பத்தினரால் நடத்தப்படும் மலபார் வீட்டு தங்குமிடம் போன்ற தங்கும் விடுதிகள், யாழ்ப்பாணத்தை ஒரு கலாசார பயண இடமாக மீண்டும் உயிர்ப்பித்து வருகின்றன.

யாழ்ப்பாணத்தின் நுணுக்கமான வரலாற்றைப் புரிந்து கொள்ள, போரின் போது தீக்கிரையாக்கப்பட்டு, மீளக் கட்டியெழுப்பப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தைப் பார்வையிடலாம்.

1619 ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ஐங்கோண வடிவ யாழ்ப்பாணக் கோட்டை; மற்றும்  அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்ட இரண்டு பதுங்கு குழிகளை பார்வையிட முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மணி நேர படகு பயணம் மூலம் சிறிய நெடுந்தீவை அடையலாம்.

ஆழமற்ற பாறை, பவளப்பாறைகளால் வேலி அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் நெடுந்தீவு கிராமிய தங்குமிடம் போன்ற தங்கும் விடுதிகளுடன், வீட்டில் சமைத்த உணவுகளுக்கு இடையில் மெதுவாகச் சுற்றிச் செல்ல ஏற்றது.

யாழ்ப்பாணத்தில் பயணம் செய்வதற்கு மிதிவண்டி, முச்சக்கர வண்டி, பேருந்து அல்லது படகு என்பன இலகுவானது.

அதே நேரத்தில் தொடருந்துகள் மற்றும் பேருந்துகள் நகரத்தை சிறிலங்கா தலைநகர் கொழும்புடன் இணைக்கின்றன மற்றும் சென்னையிலிருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, விருந்தோம்பல் இங்கு ஆழமானது.

அங்கு சூடான புன்னகைகள், நுரைமிக்க தேநீர் கோப்பைகள் மற்றும் நண்டு கறி விருந்துகள் ஏராளமாக உள்ளன. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயண வெளியீட்டில் உலகின் மிகவும் நம்பகமான பெயரான லோன்லி பிளானட், ஆண்டுதோறும் ‘சிறந்த பயணங்கள்’ தொடரை வெளியிடுகிறது.

உலகம் முழுவதும் மிகவும் ஊக்கமளிக்கும் 25 இடங்களைக் கொண்டாடுகிறது.

புதுமை, நிலைத்தன்மை மற்றும் தனித்துவமான பார்வையாளர் அனுபவங்களில் கவனம் செலுத்தி, லோன்லி பிளானட்டின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பயண நிபுணர்களின் வலையமைப்பால் இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நிபுணர் ஆய்வாளர்கள் ‘சிறந்த பயணங்கள்’ பட்டியலில் சேர்க்க இணையற்ற இடங்களைத் தேடி உலகின் மிக தொலைதூரப் பகுதிகளை ஆராய்கின்றனர்.

இந்த அங்கீகாரம் அனைத்துலக சுற்றுலா அரங்கில் சிறிலங்காவின் சுற்றுலாத் தெரிவுநிலையை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்திய சுற்றுலா மேம்பாடு மற்றும் குறைவாக அறியப்பட்ட இடங்களில் சமூக அடிப்படையிலான பயண அனுபவங்களை மேம்படுத்துவதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இது ஒரு மதிப்புமிக்க ஒப்புதலாகவும் செயற்படுகிறது.

உலகின் மிகவும் நம்பகமான மற்றும் செல்வாக்குமிக்க பயண ஊடகங்களில் ஒன்றான, லோன்லி பிளானட்டின் பரிந்துரைகள் டிஜிட்டல் மற்றும் அச்சு தளங்களில் மில்லியன் கணக்கான வாசகர்கள், பயணிகள் மற்றும் தொழில் வல்லுநர்களைச் சென்றடைகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *