சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் முடக்கம்.
சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டு, ஆபாச இணையத்தள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுகுறித்த கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துள்ளனர்.
அரசாங்க இணையத்தளங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது அரசாங்க இணையதளங்களின் இணையப் பாதுகாப்பு குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
சிறிலங்கா அரசாங்க இணையதளங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் பலமுறை எச்சரித்திருந்தனர்.