மேலும்

ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்

ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான ஒரு உடன்பாடு  குறித்து நாளை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கவுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இணைந்து செயற்படவுள்ளன.

தற்போதைய சூழலில் பொதுவான நலன் சார்ந்த விடயங்களில் இணைந்து செயற்பட ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், மேலும் விபரங்களை நாளை ஊடகச் சந்திப்பின் போது வெளியிடுவதாகவும் கட்சிகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *