சிறிலங்கா கடற்படையில் முறைகேடு – யோஷித ராஜபக்ச கைது
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ச, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், வாக்குமூலம் பெற்றுக் கொண்ட பின்னர் அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படையில் முறைகேடாக இணைந்து கொண்டது மற்றும், பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அனுப்பப்பட்டதில் முறைகேடுகள் செய்ததாக யோஷித ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணைகள் முன்னெடுத்து வந்த நிலையில், இன்று காலை அவரைக் கைது செய்துள்ளது.
