சீனாவின் மூன்றாவது உயர்மட்டத் தலைவர் சாவோ லெஜி சிறிலங்கா வருகிறார்
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் சாவோ லெஜி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை கொழும்பிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சாவோ லெஜி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமையே சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திக்கவுள்ளனர்.
சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங்கிற்குப் பின்னர், சீன அரசாங்கத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியில் உள்ள, சாவோ லெஜியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அவர் இரண்டு நாள்கள் சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
பேரிடருக்குப் பின்னரான உடனடித் தேவைகள் மற்றும் எதிர்கால சீன உதவி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்க தரப்புகளுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும், சீனாவின் மூன்றாவது சக்திவாய்ந்த தலைவரான சாவோ லெஜியும் ஒரே நாளில் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவுள்ளனர்.
