மேலும்

நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியப் பேரவையின் அரசியல் குழுவினர்  இன்று சென்னை, தியாகராஜ நகரில் அமைந்துள்ள பா.ஜ.கவின்  மாநில தலைமையகமான  கமலாலயத்திற்குச் சென்றனர்.

அங்கு கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனைச்  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 1.00 மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படவும், ஏக்கிய ராஜ்ய அரசியலமைப்பு நிறைவேற்றுவதனை தடுத்து நிறுத்தவும், சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படவும் சிறிலங்கா அரசை வலியுறுத்துமாறும்,  ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும், இந்திய மத்திய அரசை வலியுறுத்த பாஜக மாநில தலைவர் என்ற வகையில்  நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில்  தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொன்னுத்துரை ஐங்கரநேசன் , செல்வராசா கஜேந்திரன், தர்மலிங்கம் சுரேஸ், நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *