நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு பயணமாகிறார் ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் திங்கட்கிழமை அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்களையும், எதிர்க்கட்சி பிரமுகர்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பேரிடருக்குப் பின்னரான மீளமைப்புக்கான இந்தியாவின் உதவிப் பொதியை அவர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
