அதிகாரபூர்வ மொழிக் கொள்கையை வலியுறுத்திய கனடிய தூதுவர்
சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் இசபெல் கத்தரின் மார்ட்டின், அனைத்து குடிமக்களுக்கும் உள்ளடக்கம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக அதிகாரபூர்வ மொழிக் கொள்கைகளை திறம்பட செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
திங்கட்கிழமை அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன் போதே அவர் அதிகாரபூர்வ மொழிக் கொள்கைகளை திறம்பட செயற்படுத்த வேண்டியதை வலியுறுத்தியதுடன், மொழிபெயர்ப்பு மற்றும் தகவல்தொடர்புக்கு ஆதரவளிக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

