கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இன்று முற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றார்.
அதையடுத்து அவர்கள் இருவரும் கட்டுநாயக்கவில் உள்ள சிறிலங்கா விமானப்படைத் தளத்திற்குச் சென்று, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர் சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.




