மேலும்

வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்

ஒருதொகை வெளிநாட்டுப் பாதுகாப்பு படையினர் இன்னமும் சிறிலங்காவில் தங்கியுள்ளனர் என்றும், அவர்களின் உதவியுடன்  நாட்டில் விரைவில் வழமை நிலையை அரசாங்கம் கொண்டு வரும் என்றும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டியவில் நடந்த  கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“வெளிநாட்டு பாதுகாப்பு படையினர், சிறிலங்காவில் இப்போதும் இருக்கின்றனர். ஏனென்றால், அவர்களின் நாட்டவர்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டைப் பாதுகாக்க அவர்களின் உதவியை நாங்கள் பெறுவோம்.

சில நாடுகள் சிறிலங்காவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தமது நாட்டுக் குடி மக்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன என்று அந்த நாடுகளின் தூதரகங்களுக்குத் தெளிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த நாடுகள் பயண எச்சரிக்கைகளை விரைவில் நீக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பயண எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். ஆனால் அது போதுமானதல்ல. நாங்கள் சுற்றுலாத் துறையை மீளமைக்க வேண்டும்.

ஜூலையில் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வர ஆரம்பிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 கருத்துகள் “வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வழமை நிலையை ஏற்படுத்துவோம் – சிறிலங்கா பிரதமர்”

  1. Esan Seelan
    Esan Seelan says:

    தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாேடு மேற்கின் பிரசன்னமும் உறுதியாகி இலக்குகள் எட்டப்பட்டன

  2. sUbramanaim says:

    We Tamils welcome such a move, because the Sinhalese Buddhist majority has failed to uphold human rights and freedom of ALL people. Sri Lanka needs a foreign Hegemon. Such a move will improve the economy and hence all people can live in peace

Leave a Reply to Esan Seelan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *