சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம்
சிறிலங்காவில் தொலைத்தொடர்பு ஆய்வகம் (communication laboratory) ஒன்றை இந்திய இராணுவம் நிறுவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் பாடசாலையிலேயே இந்த தொலைத்தொடர்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காகவே, இந்திய இராணுவம் இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளது.
சிறிலங்காவில் நான்கு நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இந்த தொலைத்தொடர்பு ஆய்வகத்தை திறந்து வைக்கவுள்ளார்.
ஸ்ரீலங்கா மிகப் பெரும் அரசியல் சிக்கல் சகதிக்குள் மாட்டிக் கொண்டு விட்டதை இச்செய்தி காட்டுகிறது.