மேலும்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நியூயோர்க் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

maithri-depature-india (1)ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.

நியூயோர்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் நேற்று வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 29 பேர் காயமடைந்ததால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள், நியூயோர்க்கில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உரையாற்றுவதற்கு நாளை மறுநாள் பிற்பகலில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பல்வேறு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இந்தியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர், நேபாள பிரதமர் புஸ்பா கமல் தால், உள்ளிட்டோரை சிறிலங்கா அதிபர் சந்திக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *