மேலும்

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார் போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

Major General G D H K Gunaratne -Farewell (1)இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.

இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் குணரத்ன 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

இந்தப் படைப்பிரிவினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இவரே பொறுப்பானவர் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன, 2001 ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், 523, 551 ஆவது பிரிகேட்களினதும், வான்வழி தாக்குதல் படைப்பிரிவினதும் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். பின்னர், 55ஆவது, 53ஆவது டிவிசன்களி்ன் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

Major General G D H K Gunaratne -Farewell (1)Major General G D H K Gunaratne -Farewell (2)Major General G D H K Gunaratne -Farewell (3)

35 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கு கஜபா படைப்பிரிவின் சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதையும்,  விருந்துபசாரமும், நேற்றுமுன்தினம் அளிக்கப்பட்டது.

இதனிடையே இவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை நூல் இன்று வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *