மேலும்

சிறிலங்காவிடம் இழப்பீடு கோருவதைக் கைவிட்டது சீனா

Gayantha-karunathilakaகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தி வைத்தமைக்காக, சிறிலங்காவிடம் இழப்பீடு கோரும் முடிவை சீன நிறுவனம் கைவிட்டுள்ளதையடுத்து, சீனாவுடன் இதுபற்றிய புதிய உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக விளக்கமளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக,

துறைமுக நகரத் திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டமைக்காக, சிறிலங்கா அரசாங்கம் 150 மில்லியன் டொலர் வரை இழப்பீடு தர வேண்டும் என்று இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சீன நிறுவனம் கோரியிருந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, சீன நிறுவனம் இழப்பீடு கோருவதைக் கைவிட்டுள்ளது. இது, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பமாகும்.

சீன நிறுவனம் இழப்பீட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலாக 2 ஹெக்ரெயர் நிலத்தை சிறிலங்கா அரசாங்கம் இரவு பந்தயத் திடலுக்காக அந்த நிறுவனத்துக்கு வழங்கும்.

62 ஹெக்ரெயர் நிலம் சிறிலங்கா அரசாங்கத்துக்குச் செந்தமாக இருக்கும் என்ற- ஏற்கனவே செய்யப்பட்ட உடன்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது.” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *