மேலும்

மாத்தறை இராணுவ அணிவகுப்பை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு

Suresh-Premachandranசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த இராணுவ அணிவகுப்பை புறக்கணிப்பது என்ற தெளிவான நிலைப்பாட்டை, கூட்டமைப்பு எடுத்திருக்கிறது.

ஆனால், இரா.சம்பந்தனின் சார்பிலோ, சுமந்திரனின் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள், வெற்றி விழா நிழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று ஆரம்பத்தில் இருந்தே தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

இது தமிழர்கள் கொண்டாடும் நாள் அல்ல. இது சிறிலங்கா இராணுவத்தினரின் கொண்டாட்டத்துக்குரிய நாளாக இருக்கலாம், ஆனால், இதனை தமிழ்மக்களால் கொண்டாட முடியாது.

தனிப்பட்ட ரீதியாக, மாத்தறையில் நடைபெறும் நிகழ்வில் நான் பங்கேற்கப் போவதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *