மேலும்

சிறிலங்காவில் புதிய நம்பிக்கை – அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

obamaசிறிலங்காவில் ஜனநாயகம் குறித்த புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதுடெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நேற்று புதுடெல்லியில் 2000 வரையான இளைஞர்கள், புலமையாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இதன் போது அவர், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

“இந்தியர்கள் மட்டுமே, உலகில் இந்தியாவின் பங்கை தீர்மானிக்க முடியும்

அதிகாரத்தைப் பொறுப்பேற்பதன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் இந்தியா ஒரு சாதகமான பங்கை வகிக்க முடியும். ஏனைய நாடுகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும்.

பர்மா தொடக்கம் சிறிலங்கா வரை ஜனநாயகம் குறித்த புதிய நம்பிகை இன்று ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் உங்களுக்குள்ள அனுபவங்களின் மூலம் ஏனைய நாடுகளுக்கு உதவ முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *