மேலும்

Archives

சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகளின் தொகுப்பு)

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தெகிவளையில் மற்றொரு குண்டு வெடிப்பு – 2 பேர் பலி

கொழும்பு – தெகிவளையில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குள் 26 சடலங்கள்

கொழும்பு- கொச்சிக்கடை  அந்தோனியார் தேவாலய வளாகத்தில் 26 பேரின் சடலங்கள் கிடப்பதாக சிறிலங்கா காவல்துறையினரை மேற்கொள்காட்டி, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 24 பேரின் சடலங்கள்

கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் மற்றும் ஆடம்பர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட 24 பேரின் சடலங்கள், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

6 குண்டுவெடிப்புகளில் குறைந்தது 10 பேர் பலி –  நூற்றுக்கணக்கானோர் காயம்

சிறிலங்காவில் இன்று காலை மூன்று தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் நிகழ்ந்த ஆறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பில் 3 ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு

கொழும்பு – நகரில் உள்ள பிரபலமான மூன்று,  ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் இன்று காலை குண்டுவெடிப்புகள்  இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இரு தேவாலயங்களில் குண்டுகள் வெடிப்பு – பலர் பலி?

கொழும்பு- கொட்டாஞ்சேனையில் உள்ள கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் இன்று காலை ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்ததில் பலர் கொல்லப்பட்டனர். 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படை அதிகாரியின் முறைப்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைது

முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவரை தாக்கினார் என செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ். ஊடகவியலாளர் தயாபரன் படுகாயம் – உந்துருளி விபத்து குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் -புத்தூரில், உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த ஊடகவியலாளர் ஆர்.தயாபரன், யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்

அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும்,  போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.