பயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக, பனை நிதியத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.
மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் மதம் செல்வாக்கு செலுத்துவது போல தெற்காசிய நாடுகளிலும் மதம், அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையை பெற்று கொண்டுள்ளது. குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தெற்காசிய நாடுகளில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் மத செல்வாக்கு மிகவும் அதிகரித்த நிலை உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமெரிக்காவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.
ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.