மேலும்

Archives

பொதுவேட்பாளரை தேடும் தமிழ் பிரமுகர்கள் குழு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியில் நிறுத்துவதற்கான முயற்சிகளில் தமிழ் மக்கள் பேரவை மற்றும் பேரவையினால் நியமி்க்கப்பட்ட பிரமுகர்கள் குழு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்துக்காக பதவி உயர்த்தப்பட்ட யோஷித ராஜபக்ச

சிறிலங்கா கடற்படையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

சஜித்தை நிறுத்த ஐதேக சம்மேளனம் அங்கீகாரம்

சஜித் பிரேமதாச அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு  ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு சம்மேளனக் கூட்டத்தில் இன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இரு முன்னாள் அமைச்சர்கள் சஜித்துக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள், ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உயர்மட்டக் குழு மகிந்தவுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று, நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

அமெரிக்க – சிறிலங்கா மரைன் படையினரின் கூட்டுப் பயிற்சி நிறைவு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவும், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து,  இருதரப்பு மருத்துவ பரிமாற்ற பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.

மொட்டுக்கு ஆதரவு அளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டம்

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கத் தயார் என்ற போதும், மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் அளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டி – ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியது சீனா

ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கக் கூடிய நவீன ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை, சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கியுள்ளது.

நிபந்தனையின்றி சஜித்தை வேட்பாளராக நிறுத்த ரணில் இணக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்நிபந்தனைகள் ஏதும் இல்லாமல், நிறுத்துவதற்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.