தேசியப்பட்டியலில் மகிந்த முன்மொழிந்தோருக்கும் இடமில்லை – மைத்திரியின் யோசனையும் நிராகரிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில், மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட பலருக்கு இடமளிக்கப்படாத அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிப்பதில்லை என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
