மேலும்

Tag Archives: மங்கள சமரவீர

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சமந்தா பவர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சமந்தா பவருடன் மங்கள சமரவீர பேச்சு – அனைத்துலக ஆதரவை கோரினார்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பு வந்தார் சமந்தா பவர் – விமான நிலையத்தில் காத்திருந்து வரவேற்றார் மங்கள

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த, சமந்தா பவரை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வரவேற்றார்.

இன்று கொழும்பு வரும் சமந்தா பவர், நாளை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் – கூட்டமைப்புடனும் சந்திப்பு

ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மூன்று நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ள அவர், நாளை மறுநாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஐ.நா குழுவைச் சந்தித்தோருக்கு அச்சுறுத்தல் – சிறிலங்கா அரசு விசாரிக்கும் என்கிறார் மங்கள

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவிடம் சாட்சியமளித்தோர், அச்சுறுத்தப்பட்டதான குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு விரைவில் அனுமதி – சீனாவுக்கு சிறிலங்கா தெரிவிப்பு

இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான சமிக்ஞை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ளதாக,சீனா அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராகச் சிறிலங்கா வந்த, அந்த நாட்டின்  உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின் தெரிவித்துள்ளார்.

மங்களவும், விஜேதாசவும், மின்சார நாற்காலியில் இருந்து மகிந்தவை காப்பாற்றியுள்ளனர் – ரணில்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுமே, மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அமெரிக்காவின் தீர்மான வரைவை ஜெனிவாவில் சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்கா தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஜெனிவாவில் இருந்து கொழும்பு வந்த ‘சூடான உருளைக்கிழங்கு’ – இரகசிய நடவடிக்கை பற்றிய தகவல்கள்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, ‘சூடான உருளைக்கிழங்கு நடவடிக்கை’ (Operation Hot Potato) என்ற இரகசிய சங்கேதப் பெயரில், சிறிலங்கா அரசாங்கத்திடம், இரகசியமாக கையளிக்கப்பட்டது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் தனிச் செயலகம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின், சிறப்பு செயலகம் ஒன்றை கொழும்பில் அமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.