புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை ஒப்படைக்க இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


