துறைமுக நகருக்கான நில மீட்பு பணிகளில் 50 வீதம் பூர்த்தி
கொழும்பு துறைமுக நகரத்தை அமைப்பதற்கான, நிலத்தை உருவாக்கும் பணிகள் பாதிக்கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், நிலத்தை உருவாக்கும் பணிகள், 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் சிறிலங்காவின் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


