சிறிலங்கா அதிபர், பிரதமருடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஜாவிட் பஜ்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.