மேலும்

Tag Archives: சென்னை

சென்னையில் தூதரகம் அமைக்க சீனா ஆர்வம் – தமிழ்நாட்டின் மீது திரும்புகிறது கவனம்

தமிழ்நாட்டுடனான வர்த்தக, கலாசார உறவுகளை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறக்க சீனா விருப்பம் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசிய,  இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லீ யூசெங், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக சிறிலங்காவுடன் கைகோர்க்கும் இந்தியா

சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் தலையீடுகள் தொடர்பாக, சிறிலங்காவின் புலனாய்வு அமைப்புகளுடன் இந்தியப் புலனாய்வு அமைப்புகள், பேச்சுக்களை நடத்தவுள்ளன.

மீனவர்களின் விவகாரம்: வியாழனன்று சிறிலங்கா அதிபர் முக்கிய சந்திப்பு

இந்திய – சிறிலங்கா மீனவர்களுக்கு இடையில் மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு,  இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக, வடக்கிலுள்ள மீனவர் சங்கங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண மீன்பிடி அமைச்சர் ஆகியோருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்தவுள்ளார்.

மாநிலஅரசு பரிந்துரை செய்தால் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை – இந்திய அமைச்சர் தெரிவிப்பு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் பரிந்துரை செய்தால், அதுகுறித்து இந்திய மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யும் என இந்திய மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

சென்னையில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான சாகிர் ஹுசேனுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலையீடின்றி சிறிலங்காவில் எந்த மாற்றமும் வராது – சென்னையில் மாவை

இந்தியாவின் தலையீடு இல்லாமல் சிறிலங்காவில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை

தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஒரு இலட்சம் இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப  இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

விராலிமலை ஆசிரமத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சென்னையில் நாளை நடைபெறவுள்ள கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றிரவு திருச்சி அருகேயுள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.

சென்னை சென்றடைந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு

சென்னையில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கதிகலங்கிப் போனது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையப் பணியாளர்கள் இன்று காலை நடத்திய திடீர் பணிநிறுத்தப் போராட்டத்தினால், சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.