மேலும்

Tag Archives: சீனா

ட்ரம்ப்பின் ஆட்சி சிறிலங்காவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இது ஒரு வேடிக்கையான விடயமாக நோக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது டொனால்ட் ட்ரம்ப் உலகின் அதிகாரம் மிக்க ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் முக்கிய வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் குறித்த சிவ்சங்கர் மேனனின் நூல்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள்  சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார்.

மகிந்தவின் சீனப் பயணத்துக்கு தேவையான உதவிகளை வழங்க சிறிலங்கா பிரதமர் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்கவில்லை – சிறிலங்கா பிரதமர்

முன்னைய ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை, தற்போதைய அரசாங்கம் சீனாவுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

சீனத் தூதுவர் சிறந்த நண்பர்; ஊடகங்களே முரண்பாடுகளுக்கு முன்னுரிமை- மங்கள சமரவீர

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் நல்லதொரு நண்பர் என்றும், ஊடகங்களே எப்போதும், முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா இழப்பு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் மூலம் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தினால், ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா (147 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சின் ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன – சிறிலங்கா உறவுகளுக்குள் என்ன நடக்கிறது?

சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? – சிறிலங்காவுக்கு சீனத் தூதுவர் சவால்

கடந்த ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டது என்பதை சிறிலங்கா அரசாங்கத்தினால் நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுவரின் கருத்தை நியாயப்படுத்துகிறது சீன வெளிவிவகார அமைச்சு

சிறிலங்கா தொடர்பாக சீனத் தூதுவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை சீன வெளிவிவகார அமைச்சு நியாயப்படுத்தியுள்ளது.

மகிந்தவுக்கு சீனா அழைப்பு – இம்மாதம் பீஜிங் செல்கிறார்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்த மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூட்டு எதிரணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.