மேலும்

Tag Archives: சீனா

சீனாவிடம் கடன் பெற்றது இராஜதந்திரம் என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே என்று கூறியுள்ளார், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச.

சிறிலங்காவின் 40 வீத கட்டுமானப் பணிகள் சீனாவின் கையில் – 70 வீதத்தை கைப்பற்ற குறி

சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்

சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுத் திட்ட விவகாரத்தில் சீனத் தலையீடு – பொறியில் சிக்கியுள்ள கூட்டமைப்பு

வடக்கு- கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டம் சீன நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

செயற்கைத் தீவு சீன நிறுவனத்துக்கு வழங்கப்படாது – மகிந்த சமரசிங்க

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையே உறுதிப்படுத்தும் என்றும், அதற்காக, துறைமுகப் பகுதியில் புதிதாக அலைதாங்கி தடுப்புகள் அமைக்கப்படும் என்றும் சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான கடைசி கொடுப்பனவை வழங்கியது சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கியுள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உயர்மட்டக் குழு

சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனாவில் உள்ள பணியகங்களில் தொங்கும் மகிந்தவின் நிழற்படங்கள்

சீனாவில் உள்ள நிறுவனங்களில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் நிழற்படங்களைக் காண முடிவதாக, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் கால் வைத்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள்

சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள  சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா

அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனத் தூதுவர் செங் ஷியுவான் நிராகரித்துள்ளார்.